TNPSC Thervupettagam

ராமநாதபுரத்தில் சூரிய மின்சக்திப் பூங்கா

December 19 , 2017 2533 days 926 0
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இராமநாதபுரம் மாவட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்திப் பூங்காவினை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டில் அரசுக்கு சொந்தமான மின்விநியோக நிறுவனம் ஆரம்பிக்கும் முதல் சூரியமின்சக்திப் பூங்கா இதுவே ஆகும்.
  • இந்த திட்டமிடப்பட்டுள்ள சூரியமின்சக்திப் பூங்கா இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான கடலாடியில் உள்ள நரிப்பையூர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது.
  • தமிழ்நாட்டில் சூரியக் கதிர்வீச்சு அதிகம் உள்ள மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகியவையாகும்.
  • தமிழ்நாடு ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தை (Tamil Nadu Energy Development Agency - TEDA) பொறுத்த வரை இராமநாதபுரம் 5.67 என்ற அளவிற்கு உலகளாவிய கிடைமட்ட கதிரியக்கம் (Global Horizontal Irradiance - GHI) கொண்டுள்ளது. இதனால் உற்பத்தித் திறன் (Plant Load Factor - PLF) அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்