TNPSC Thervupettagam
May 11 , 2019 1906 days 1185 0
  • ராமானுஜரின் பிறந்த தினமானது ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது தமிழ் சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது சித்திரை மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத் தினத்தன்று நிகழ்கின்றது. இது 2019-ஆம் ஆண்டு மே 9 அன்று நிகழ்கின்றது.
  • இவரது சமயம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் ஆகியவை பின்வரும் முக்கியமான 2 வைணவ மையங்களில் பரப்பப் படுகின்றன.
    • திருச்சியின் ஸ்ரீரங்கத்தில் உள்ள திருவரங்கநாதர் ஆலயம்
    • ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரர் ஆலயம்
  • வைணவத் தத்துவ ஞானியான இராமானுஜர் ஒரு புரட்சிகர சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
  • இவர் பாலினம், தேசியவாதம், சாதி, மதம், இனம், சமூகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் படாமல் ஒவ்வொரு மனிதரும் சமம் என்ற தனது கொள்கையை ஊக்குவித்தார்.
  • விஷிஷ்ட அத்வைதா தத்துவத்தின் சிறந்த ஆதரவாளராக ஸ்ரீ ராமானுஜர் விளங்குகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்