TNPSC Thervupettagam

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் திறந்து வைத்தார்

July 28 , 2017 2721 days 1213 0
  • ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
  • ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது.
  • இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
  • இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
  • அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான 27 ஜூலை 2017 அன்று இந்த மணிமண்டத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்