TNPSC Thervupettagam

ராம் மோகன் ராய் அவர்களின் 250வது பிறந்தநாள்

May 28 , 2022 787 days 444 0
  • ராஜா ராம் மோகன் ராய் அவர்களின் 250வது பிறந்தநாளானது இந்த ஆண்டு மே 22 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • இவர் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று பிரபலமாக நினைவு கூறப் படுகிறார்.
  • இவர் 1772 ஆம் ஆண்டில் 22 மே மாதத்தில் ராதாநகர் என்னுமிடத்தில் (வங்காள மாகாணம்) பிறந்தார்.
  • இவர் இங்கிலாந்தில் இரண்டாம் அக்பரின் சார்பாக முன்னின்று, அவரது ஓய்வூதியக் கோரிக்கைக்காக வாதிட்டார்.
  • இரண்டாம் அக்பர் இவருக்கு ‘ராஜா’ என்ற பட்டத்தை வழங்கினார்.
  • இவர் சதி என்னும் நடைமுறைக்கு எதிராகப் போராடியதால் 1829 ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டமானது நடைமுறைக்கு வந்தது.
  • இவர் சிலை வழிபாடு, அர்த்தமற்றச் சடங்குகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறப் போராட்டத்திற்காக வேண்டி 1814 ஆம் ஆண்டில் ஆத்மிய சபையைத் தொடங்கினார்.
  • 1817 ஆம் ஆண்டில் டேவிட் ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தாவில் ஓர் இந்துக் கல்லூரியை நிறுவினார்.
  • 1821 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வில்லியம் ஆடம் மற்றும் ராம்மோகன் ராய் ஆகியோரால் இணைந்து கல்கத்தா ஒற்றுமைக் குழு நிறுவப் பட்டது.
  • இவர் 1828 ஆம் ஆண்டில் ‘பிரம்ம சபையை' உருவாக்கினார் (தேபேந்திரநாத் தாகூருடன் இணைந்து அமைக்கப்பட்டது).
  • இவர் 1822 ஆம் ஆண்டில் இயந்திரவியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களைக் கற்பித்த ஆங்கிலேய-இந்துப் பள்ளியை நிறுவினார்.
  • இவர் 1825 ஆம் ஆண்டில், இந்திய முறையிலான கற்றல், மேற்கத்தியச் சமூகம் மற்றும் இயற்பியல் அறிவியல் கற்பிக்கப்பட்ட வேதாந்தக் கல்லூரியைத் தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்