TNPSC Thervupettagam
October 13 , 2020 1383 days 614 0
  • சமீபத்தில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த (2014 ஆம் ஆண்டு மே 26லிருந்து) ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்.
  • பஸ்வான் 1969 ஆம் ஆண்டில் பீகார் சட்டசபையில் உறுப்பினராகப் பதவிப் பொறுப்பேற்றார்.
  • இவர் 1977 ஆம் ஆண்டில் ஜனதா கட்சியின் உறுப்பினராக முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர்  தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கான உலக சாதனையை கைவசம் கொண்டுள்ளார்.
  • இவர் தொடர்ந்து 5 முறை பீகாரில் உள்ள ஹாஜிப்பூர் தொகுதியிலிருந்து ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் 2000 ஆம் ஆண்டில் லோக் ஜன்சக்தி கட்சியை ஏற்படுத்தினார்.
  • இவர் முதலாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் (2001-2002) மத்திய சுரங்கத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • இவர் 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து, 2009 ஆம் ஆண்டு வரை மீண்டும் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்