- ராம்சார் ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் தளங்களில் இந்தியா மேலும் 10 ஈரநிலங்களைச் சேர்த்துள்ளது.
- இதன் மூலம், ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 37 தளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- சமீபத்தில் ராம்சார் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள 10 தளங்களில், மகாராஷ்டிரா (நாந்துர் மாதமேஸ்வர் பறவைகள் சரணாலயம்) மாநிலமானது தனது முதலாவது ராம்சார் தளத்தைப் பெற்றுள்ளது.
வரிசை எண்
|
மாநிலங்கள்
|
ராம்சார் தளங்கள்
|
1
|
மகாரஷ்டிரா
|
- நந்தூர் மாதமேஸ்வர் பறவைகள் சரணாலயம்
|
2
|
பஞ்சாப்
|
- பியாஸ் பாதுகாக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட காடுகள்
- கேஷோபூர் - மியானி சமூக காடுகள்
- நங்கல் வனவிலங்கு சரணாலயம்
|
3
|
உத்தரப் பிரதேசம்
|
- நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம்
- பார்வதி அர்கா பறவைகள் சரணாலயம்
- சமன் பறவைகள் சரணாலயம்
- சர்சாய் நவார் ஏரி
- சமஸ்பூர் பறவைகள் சரணாலயம்
- சாண்டி பறவைகள் சரணாலயம்
|
ராம்சார் ஒப்பந்தம் மற்றும் மாண்ட்ரெக்ஸ் பட்டியல் பற்றி
- ராம்சார் ஒப்பந்தம் என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
- இந்த ஒப்பந்தமானது 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று கையெழுத்தானது.
- மாண்ட்ரெக்ஸ் பட்டியல் என்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலங்களின் பட்டியலில் உள்ள ஈரநில தளங்களின் பதிவுகளாகும்.
- கியோலேடியோ தேசியப் பூங்கா (ராஜஸ்தான்), லோக்டாக் ஏரி (மணிப்பூர்) ஆகியவை மாண்ட்ரெக்ஸ் பட்டியலில் உள்ள இந்திய தளங்களாகும்.
- ஈரமான நிலங்களைப் பாதுகாப்பது நல் சே ஜல் என்ற திட்டத்தை அடைய உதவும். இந்தத் திட்டமானது 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.