சுந்தரவன இருப்பு காடுகளுக்கு (Sunderban Reserve Forest) ராம்சார் உடன்படிக்கையின் (Ramsar Wetland Convention) கீழ் ராம்சார் ஈர நிலப்பகுதி அங்கீகாரத்தைப் பெற (Ramsar Site recognition) விண்ணப்பிப்பதற்கு மேற்கு வங்க மாநில அரசானது மேற்கு வங்க மாநில வனத்துறைக்கு அனுமதியை வழங்கி உள்ளது.
சுந்தரவன இருப்பு காடுகளுக்கு ராம்சார் ஈரநில அந்தஸ்து வழங்கப்பட்டால், இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட ஈரநிலப் பகுதியாக சுந்தரவன இருப்பு காடுகள் உருவாகும்.
தற்போது நடப்பில் இந்தியாவில் 26 ஈரநிலப் பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இராம் சார் ஈரநிலங்கள் (Ramsar wetland sites of international importance) எனும் அங்கீகாரத்தைக் கொண்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே கிழக்கு கொல்கத்தா ஈரநிலம் எனும் ஓர் ராம்சார் ஈரநிலம் உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளிலும் பரந்து விரிந்து காணப்படுகின்ற, வங்கக் கடற் கரையின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய பரப்புடைய, தொடர்ச்சியான மாங்குரோவ் காடுகள் சூழலமைவே (mangrove forest ecosystem) சுந்தரவன இருப்புக் காடுகளாகும்.
சுந்தரவனக் காடுகளானது பத்மா, மேக்னா, பிரம்மபுத்திரா நதியினுடைய வடிகால்களின் டெல்டா பகுதிகளில் காணப்படுகின்றன.
சுந்தர வனக் காடுகளானது உலகின் மிகப் பெரிய ஓத உவர் நில வாழ் மாங்குரோவ் காடுகளாகும் (tidal halophytic mangrove forest).
1987 ஆம் ஆண்டு சுந்தரவன காடுகளானது யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவிடமாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டது.