TNPSC Thervupettagam
April 23 , 2021 1190 days 598 0
  • ரால் காஸ்ட்ரோ (89) ஆளும் கியூப நாட்டு கம்யூனிச (பொதுவுடைமை) கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
  • இவர் வெளியேறியதுடன் கியூபாவில் 1959 ஆம் ஆண்டிலிருந்துத் தொடங்கிய கிட்டத்தட்ட 60 ஆண்டுகால குடும்ப அரசியல் முடிவுக்கு வந்தது.
  • எனவே, 60 ஆண்டுகளில் முதல்முறையாக கியூபாவின் சமதர்மவாத (சோசலிச) அரசில் காஸ்ட்ரோவின் தலைமை இனி இருக்காது.
  • இரண்டு முறை கியூபாவின் அதிபராக பணியாற்றிய ரால் காஸ்ட்ரோ 2018 ஆம் ஆண்டில் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.
  • இவர் அதிபர் பொறுப்புகளை 2018 ஆம் ஆண்டில் 60 வயதான மிகுவல் டையாஸ் கேனலிடம் (Miguel Diaz-Canel) ஒப்படைத்தார்.
  • டையாஸ் கேனல் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட உள்ளார்.

பின்னணி

  • பிடல் காஸ்ட்ரோ 50 வருடங்களுக்குக் கியூபாவை வழி நடத்தினார்.
  • அவர் தனது சகோதரர் ராலுடன் இணைந்து 1959 ஆம் ஆண்டில் சர்வாதிகாரியான  புல்ஜென்சியோ படிஸ்டாவினை (Fulgencio Batista) பதவியிலிருந்து வெளியேற்றினார்.
  • பிரிட்டன் அரசி எலிசபெத் மற்றும் தாய்லாந்தின் அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் ஆகியோரையடுத்து நீண்ட நாட்கள் ஆட்சி செய்த உலகின் மூன்றாவது அதிபர் இவராவார்.
  • 2011 ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோவையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ரால் பொறுப்பேற்றார்.
  • இவர் 2014  ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள கியூபாவின் சமதர்மவாத அரசினை வழி நடத்தினார்.
  • இது 1960 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக அமெரிக்காவிற்கு கியூபாவின்  பொருளாதாரத்தில் நுழைய அனுமதியளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்