பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவானது (Cabinet Committee on Economic Affairs-CCEA) மறு சீரமைக்கப்பட்ட மத்திய நிதியுதவித் திட்டமான (Centrally Sponsored Scheme) ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் (Rashtriya Gram Swaraj Abhiyan-RGSA) என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கி வழங்கியுள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் அடைதலுக்கு (Sustainable Development Goals -SDGs) மின் – பஞ்சாயத்து திட்டத்தின் (e-Panchayat Mission Mode Project-MMP) கீழ் திறம்பட்ட மின்-ஆளுகைக்காக புத்தாக்கங்களை தொடங்குவது மீதும், உள்கட்டமைப்புகளை கட்டமைப்பது மீதும், பஞ்சாயத்து அளவிலான அரசு பணியாளர்களின் திறன் வளர்ப்பு பயிற்சியின் மீதும் இந்த மறுசீரமைக்கப்பட்ட திட்டம் கவனம் செலுத்தும்.
நாட்டினுடைய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பஞ்சாயத்து அமைப்புகள் இல்லாது உள்ள அதாவது Part – IX பகுதிகளில் இடம் பெறாத இடங்களில் (non-Part IX areas) உள்ள ஊரக உள்ளூர் அரசுகளின் நிறுவனங்களையும் இத்திட்டம் உள்ளடக்கும்.
மத்திய நிதியுதவித் திட்டமான இத்திட்டத்திற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதிப் பகிர்வு விகிதம் (Fund Sharing Ratio) 60 : 40 ஆகும். வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதிப் பகிர்வு விகிதம் 90 : 10 ஆகும். யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதியையும் வழங்கும்.