TNPSC Thervupettagam

ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான்

May 8 , 2018 2267 days 942 0
  • நாட்டின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை பலப்படுத்தவும், அவற்றின் வெற்றிக்கு இடையூறாக இருக்கும் முக்கிய இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவும் பிரதமர் ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்ட்லா மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் இராம்நகர் மலைப்பகுதிகளில் தொடங்கப்பட்டது.
  • மத்திய அரசுத் திட்டமான இத்திட்டம் ஊரக உள்ளாட்சி மன்றங்களை சுய நீட்டிப்புத்திறன் (Self–Sustainable), நிதியியல் ஆரோக்கியம் மற்றும் அதிகத் திறமையுடைய அமைப்பாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புடைமைகளின் அதிகாரப் பகிர்வை ஊக்குவித்தல், கொள்திறன் (Capacity) மற்றும் செயல்திறன் (Effectiveness) ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கும் முக்கிய இடைவெளியை (Critical Gap) குறிப்பிட்டுக் காட்டுவதற்கு இத்திட்டம் முற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்