TNPSC Thervupettagam

ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மஹோத்சவ் 2017

October 8 , 2017 2605 days 847 0
  • ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மஹோத்சவ் நிகழ்ச்சியானது நாட்டின் செறிந்த கலாச்சார பாரம்பரியங்களை காட்சிப்படுத்த மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏற்படுத்தப்படுகின்றது.
  • 2017-க்கான இந்நிகழ்ச்சி இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தில் நடக்க உள்ளது.
  • இந்த வருடம் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகமானது மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூட்டிணைவுடன் ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் திட்டத்தின் கீழ் (ஒரே இந்தியா சிறந்த இந்தியா) இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.
ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்
  • வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாழும் பல்வேறு கலாச்சாரமுடைய  மக்களிடையே கலந்துரையாடலை மேம்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும், மக்களிடையே பரஸ்பர கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துடன் இணைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்