ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஒரு கூற்றுப்படி, ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களால் அறிவிக்கப்பட்டு ஹவுதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட புதிய இராணுவ நடவடிக்கைகளில் இதுவரையில் அறியப் பட்ட மிக மோசமான தாக்குதலை இது குறிக்கிறது.
ராஸ் இசா மீதான தாக்குதல் ஆனது முதல் முறையாக எண்ணெய் அகழந்தெடுப்பு உள்கட்டமைப்பினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் ஆகும்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஹவுதிகள் 100க்கும் மேற்பட்ட கப்பல்களைத் தாக்கி, நான்கு மாலுமிகளைக் கொன்றனர் என்ற நிலையில் இந்தச் சம்பவம் செங்கடலில் வர்த்தக நிலையினைச் சீர்குலைத்தது.