பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்தினை சக்தி காந்த தாஸ் திறந்து வைத்தார்.
இந்த மையமானது 100 கோடி ரூபாயைத் தொடக்க மூலதனப் பங்கீடாகக் கொண்டு, முழுவதுமாக இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை நிறுவனமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்காக S. கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு தன்னாட்சி வாரியம் என்பது அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள குறைவான வருமானமுடைய மக்கள் பல்வேறு நிதிப் பயன்கள் மற்றும் சேவைகளைப் பெறச் செய்து அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சூழலமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.