TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள்

March 29 , 2020 1706 days 554 0
  • கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மத்திய வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே நடத்தியுள்ளது.
  • இது 2019-20 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் 7வது நிதிக் கொள்கை அறிக்கையாகும். 
  • ரிசர்வ் வங்கி இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.3.74 லட்சம் கோடியைச் செலுத்த உள்ளது.
  • ரெப்போ விகிதம் 75 அடிப்படைப் புள்ளிகள் (Basis points) குறைக்கப் பட்டு 4.4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 90 அடிப்படை புள்ளிகள் குறைக்கப் பட்டு 4% ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • அனைத்துக் கடன்களுக்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் (வீட்டுக் கடன் வழங்குனர்களும் பிற நிதி நிறுவனங்களும் இதில் அடங்கும்) உத்தரவு இட்டுள்ளது.
  • ரொக்க இருப்பு விகிதம் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு நிகர நேர மற்றும் தேவைப் பொறுப்புகளில் 3% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • இது வங்கிகளுக்குள் ரூ.1,37,000 கோடி மதிப்புள்ள நிதியை வெளியிடும்.
  • மத்திய வங்கியின் ஒட்டுமொத்த நிதி உட்செலுத்துதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதமாக உள்ளது.
  • ரிசர்வ் வங்கி 2020 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நிகர நிலையான நிதி  விகிதத்தை (Net Stable Funding Ratio) அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது கிடைக்கப் பெறும் நிலையான நிதியுதவியின் அளவுக்கும் தேவைப்படும்  நிலையான நிதியுதவியின் அளவுக்கும் இடையிலான ஒரு விகிதமாகும். 
  • 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இவை செயல்படாத சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட வேண்டும் என்று கவலைப் படாமல், நிறுவனங்களுக்கானச் செயல்பாட்டு மூலதனச் சுழற்சியை மறுசீரமைக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
  • விளிம்பு நிலை வசதி என்று அழைக்கப்படும் ஒரு அவசர கடன் வழங்கு முறையின் கீழ் 1.37 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கச் செய்யப் படும்.
  • இதன் மூலம் வங்கிகள் தங்களது வைப்பு நிதிகளின் மேல் தற்போது உள்ள 2 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 3 சதவிகிதம் என்ற அளவிற்கு கடன் வாங்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்