TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை

August 10 , 2020 1571 days 658 0
  • 2020-21 ஆம் ஆண்டின் 7வது இரு மாதத்திற்கொரு முறையிலான நாணயக் கொள்கையில், இந்திய ரிசர்வ் வங்கியானது "குறைந்த வட்டிவிகிதங்கள்" நிலைப்பாட்டை ("accommodative" stance) தக்க வைத்துக் கொள்ளவும், ரெப்போ கொள்கை விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதனை 4% ஆக வைத்திருக்கவும் முடிவு செய்துள்ளது.
  • இந்தியப் பொருளாதாரத்தில் கோவிட்-19 தொற்றின் தாக்கத்தைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியைப் புதுப்பிக்கவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
  • இதன் விளைவாக ரிசர்வ் வங்கியானது,  நேர்மாற்று மறுகொள்முதல் விகிதத்தை (Reverse repo rate) மாற்றமேதுமில்லாமல் ரொக்கத் தகவமைப்பு வசதியின் (Liquidity adjustment facility) 3.35  சதவீதத்திலும், விளிம்பு நிலை வசதி வீதத்தையும் (Marginal standing facility), வங்கி வீதத்தையும் 4.25 சதவீதமாகவும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
  • முதல் காலாண்டிற்கான ரிசர்வ் வங்கியின் வணிக மதிப்பீட்டுக் குறியீடானது, கணக்கெடுப்பு வரலாற்றில் மிகக் குறைந்த புள்ளியைக் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்