TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் மாநில நிதி: 2024-25 நிதிநிலை ஒதுக்கீடு குறித்த ஆய்வு

December 31 , 2024 22 days 113 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, “மாநில நிதி: 2024-25 நிதிநிலை ஒதுக்கீடு குறித்த ஆய்வு” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • மாநில அரசுகள் ஆனது, அவற்றின் ஒருங்கிணைந்த மொத்த நிதிப் பற்றாக்குறையை (GFD) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவீதத்திற்குள் வைத்துள்ளன.
  • அவற்றின் வருவாய் பற்றாக்குறையானது 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% ஆக உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில், மாநில அரசுகளின் GFD ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2% ஆக பதிவாகியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் GDP மதிப்பில் 2.4% ஆக இருந்த அவற்றின் மூலதனச் செலவினம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 2.8% ஆக உள்ளது, இது 2024-25 ஆம் ஆண்டில் 3.1% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.0% ஆக இருந்த மாநிலங்களின் மொத்த நிலுவைக் கடன்கள் ஆனது, 2024 ஆம் ஆண்டில் 28.5% ஆகக் குறைந்துள்ளது,  ஆனால் பெருந்தொற்றிற்கு முந்தைய அளவை விட இது அதிகமாக உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில், அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதிப்பற்றாக்குறை ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதமாக இருந்தது மற்றும் அவற்றின் கடன்-GDP விகிதம் 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்