இந்தியாவின் 50வது துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் - சி48 ஆனது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (Satish Dhawan Space Centre - SDSC) ஏவு தளத்திலிருந்து வணிக ரீதியிலான ஒன்பது செயற்கைக் கோள்களுடன் ரிசாட் - 2 பிஆர் 1ஐ விண்ணுக்கு எடுத்துச் சென்றது.
இந்த வெற்றிகரமான திட்டமானது ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட 75வது விண்கலமாகும்.
இது ஒரு ரேடார் உருவமாக்கல் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
இது விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் சேவைகளை வழங்குகின்றது.
இதன் பணிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இதன் ஒன்பது வாடிக்கையாளர் செயற்கைக் கோள்கள் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாகும்.
இந்த செயற்கைக் கோள்கள் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒரு வணிக ஏற்பாட்டின் கீழ் ஏவப்பட்டன.