சுமார் இருபது ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்ட உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) உறுப்பினர் நாடுகள் ஆனது வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தை (DLT) ஏற்றுக்கொண்டுள்ளன.
அவை ரியாத் வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தின் இறுதிச் சட்டத்தில் கையெழுத்திட்டன.
இது பல்வேறு நாடுகளில் உள்ள தொழில்துறை வடிவமைப்புகளின் நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும், பதிவுச் செயல்முறைகளை எளிதாக்கவும் முயல்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டுத் தாக்கல் 120 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் வடிவமைப்பு பதிவுகள் சுமார் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.