மும்பை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஸ்ரீ நகரில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவானது செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை குறித்த பிரச்சினையைத் தீர்க்க முன்வந்துள்ளது.
இக்குழுவானது உள்ளூரில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி ருதார் என்ற குறைந்த செலவு கொண்ட செயற்கை சுவாசக் கருவிகளை உருவாக்கி உள்ளது.
இந்த செயற்கை சுவாசக் கருவியானது ஜம்மு காஷ்மீர் அறிவியல் & தொழில்நுட்பத்தின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வடிவமைப்புப் புத்தாக்க மையத்தின் உதவியைப் பெற்று வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த மையமானது இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.