ருத்ரகிரி மலையானது, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் அட்சம்பேட் மண்டலத்தின் ஓர்வக்கல்லு கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த தளத்தில் இடைக் கற்காலத்தினைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்தைய காலகட்டப் பாறை ஓவியங்கள் மற்றும் காகத்திய ஆட்சிக் காலத்தினைச் சேர்ந்த நேர்த்தியான கலைப் படைப்புகள் ஆகியவற்றின் கண்கவர் கலைத் தொகுப்பு காணப்படுகிறது.
இந்த குகை வாழ்விடங்களானது, சுமார் கி.மு. 5000 காலகட்டத்தில் இடைக் கற்கால மக்களின் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது.
அந்தக் காலத்தின் ஒளிர்வுமிகுப் பாறை ஓவியங்களுக்க்கான ஆதாரங்களாக இவை உள்ளன.
வெள்ளை கயோலின் மற்றும் பல்வேறு நிறமிகளிலிருந்துப் பெறப்பட்ட பல்வேறு வண்ணங்களால் வர்ணம் பூசப்பட்ட ஓவியங்கள், இராமாயண காவியத்தின் கண்கவர் காட்சிகளையும் சித்தரிக்கின்றன.
மூன்றாவது குகையில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால கட்டப் பாறை ஓவியங்கள் காணப் படுகின்றன.