பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இது எதிரி ரேடார்கள், தகவல் தொடர்பு இடங்கள் மற்றும் இதர ரேடியோ அதிர்வெண் உமிழும் இலக்குகள் போன்ற எந்தவொரு கதிர்வீச்சு உமிழும் சாதனத்தையும் இலக்கு வைத்து, அதைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு கதிர் வீச்சு எதிர்ப்பு ஏவுகணையாகும்.
உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட முதலாவது கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை இதுவாகும்.
இது தனது செலுத்தப்படும் நிலையைப் பொருத்து 200 கிலோ மீட்டர் வரையிலான வரம்பு நிலை கொண்டதாக உள்ளது.
இது 500 மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரையிலான உயரத்திலிருந்து செலுத்தப்படும் திறன் கொண்டதாகும். மேலும் இதன் வேகம் 0.6 மாக் முதல் 2 மாக் வரையிலான (0.6 to 2 mach) வேகமாகும்.