உலக வனவிலங்கு நிதியம் (WWF) ஆனது மஹ்முதியா ஈரநிலத்தை ‘தேசிய நலன் சார்ந்த சூழலியல் மறுசீரமைப்புப் பகுதி’யாக வகைப்படுத்துமாறு ருமேனிய நாட்டு அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளது.
அதன் இயற்கை முன்னேற்றத்தைப் பாதுகாத்து சமூகச் செழிப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ருமேனிய தன்யுபு கழிமுகத்திற்குள் இயற்கையாகவே மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஈரநிலங்களின் குறிப்பிட்ட பகுதி வேளாண் நிலமாக மாற்றப்படுவதற்கான நிலையை எதிர்கொள்கின்றன.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், தன்யுபு ஆற்றின் உயர் ஓதமானது, மஹ்முடியாவில் ஒரு சதுப்பு நிலத்தைச் சூழ்ந்திருந்த கரையை உடைத்தது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் ஆனது 1,000 ஹெக்டேர் வேளாண் நிலங்களை மூழ்கடித்து, அவற்றை கழிமுகச் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றியது.