உலகளவில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற பெண்களின் சராசரி எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது.
ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக சதவீதப் பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாக ருவாண்டா உள்ளது.
அதன் 80 கீழவையின் உறுப்பினர்களில் 49 பேர் (சுமார் 61 சதவீதம்) பெண் உறுப்பினர்களாக உள்ளனர்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 2023 ஆம் ஆண்டு பாலின இடைவெளிக் குறியீட்டில் இடம்பெற்ற 146 நாடுகளில் ருவாண்டா 12வது இடத்தைப் பெற்றுள்ளது.
1994 ஆம் ஆண்டில், 800,000க்கும் மேற்பட்ட டுட்ஸி இனத்தவர்கள் மற்றும் நடுநிலை ஹூட்டு இனத்தவர்கள், ஹூட்டு இனப் போராளிகளால் படுகொலை செய்யப் பட்டு விட்டனர்.
இதன் விளைவாக, அப்போருக்குப் பிறகு அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் பெண்களாக உள்ளனர்.