TNPSC Thervupettagam

ருவாண்டா - மார்பர்க் வைரஸ் பாதிப்பின் முடிவு

December 29 , 2024 24 days 66 0
  • ருவாண்டா அதன் முதலாவது மார்பர்க் வைரஸ் தொற்றினை (MVD) வெற்றிகரமாக கையாண்டுள்ளது.
  • இந்தத் தொற்றின் போது மொத்தம் 66 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் 15 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன.
  • MVD ஆனது முன்னதாக மார்பர்க் இரத்தக்கசிவு காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது.
  • இது மனிதர்களுக்கு ஏற்படும் கடுமையான மற்றும் பெரும்பாலும் மரணத்தினை ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயாகும் என்பதோடு இந்த நோயின் சராசரி உயிரிழப்பு விகிதம் சுமார் 50 சதவீதம் ஆகும்.
  • இந்தக் கொடிய வைரஸ் ஆனது, ஆரம்பத்தில் பழம் உண்ணும் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மற்றும் தொற்றுள்ள மேற்பரப்புகள் மற்றும் பொருட்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுகிறது.
  • 1967 ஆம் ஆண்டில் முதன்முதலில் மார்பர்க் என்னும் ஜெர்மனிய நகரத்தினைச் சேர்ந்த அறிவியலாளார்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நோய்க்கு இப்பெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்