TNPSC Thervupettagam
March 1 , 2018 2332 days 773 0
  • கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தின் சல்லகேரில் உள்ள ஏரோனாட்டிக்கல் சோதனை மையத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO- Defense Research and Development Organization) தன்னுடைய ருஷ்டம் 2 எனும் ஆளில்லா வானியல் வானூர்தி (UAV – Unmanned Aerial Vehicle) சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது.

  • TAPAS – BH – 201 என்றும் அழைக்கப்படுகின்ற ருஷ்டம் 2 ஆனது அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களினைப் (American Predator Drones) போன்று இந்தியாவால் தயாரிக்கப்பட்ட நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் (Medium Altitude and Long Endurance) திறனுடைய ஆளில்லா வான்வழி வானூர்தியாகும்.
  • இதற்கு முந்தைய ருஷ்டம் I ஆளில்லா வான்வழி விமான ஊர்தியானது 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒசூர் நகரிற்கு அருகில் அமைந்துள்ள தனேஜா ஏரோ ஸ்பேஸ் விமான தளத்தில் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டது.
  • ஒற்றைப் பயணத்தில் 24 மணிநேரம் பறக்கும் திறனுடைய இவை கண்காணிப்பு உபகரணங்களுடன் ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய, நீடித்த கண்காணிப்பு (Sustained Surveillance) செயல்பாடுகளை மேற்கொள்ளவல்ல தாக்குதல் வானியல் வானூர்திகளாகும் (Combat aerial vehicle).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்