கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தின் சல்லகேரில் உள்ள ஏரோனாட்டிக்கல் சோதனை மையத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO- Defense Research and Development Organization) தன்னுடைய ருஷ்டம் 2 எனும் ஆளில்லா வானியல் வானூர்தி (UAV – Unmanned Aerial Vehicle) சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது.
TAPAS – BH – 201 என்றும் அழைக்கப்படுகின்ற ருஷ்டம் 2 ஆனது அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களினைப் (American Predator Drones) போன்று இந்தியாவால் தயாரிக்கப்பட்ட நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் (Medium Altitude and Long Endurance) திறனுடைய ஆளில்லா வான்வழி வானூர்தியாகும்.
இதற்கு முந்தைய ருஷ்டம் I ஆளில்லா வான்வழி விமான ஊர்தியானது 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒசூர் நகரிற்கு அருகில் அமைந்துள்ள தனேஜா ஏரோ ஸ்பேஸ் விமான தளத்தில் முதன் முறையாக சோதனை செய்யப்பட்டது.
ஒற்றைப் பயணத்தில் 24 மணிநேரம் பறக்கும் திறனுடைய இவை கண்காணிப்பு உபகரணங்களுடன் ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய, நீடித்த கண்காணிப்பு (Sustained Surveillance) செயல்பாடுகளை மேற்கொள்ளவல்ல தாக்குதல் வானியல் வானூர்திகளாகும் (Combat aerial vehicle).