இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வருவாயானது 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டி உள்ளது.
தற்போதுள்ள கோவிட் – 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையினால் பொருளாதார நடவடிக்கைகள் கடந்த ஆண்டைப் போல மோசமாகப் பாதிக்கப் பட வில்லை என்பதை இது அறிவுறுத்துகிறது.
2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வசூலான அதிகபட்சவசூலான ரூ.1.24 லட்சம் கோடியை விட ஏப்ரல் மாத GST வசூலானது 14% அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக GST வருவாயானது ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வருவதையும் இது குறிக்கிறது.