இளம் பெண்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக மேற்கு வங்க அரசு ‘ரூபாஸ்ரீ’ (Rupa shree) எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு ஒற்றை முறை நிதியியல் உதவியை (one-time financial support) வழங்கும். அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபாய் செலுத்தப்படும்.
இதற்கு முன் மேற்குவங்க அரசானது பெண்களிடையே கல்வியை ஊக்குவிப்பதற்காக கன்யஸ்ரீ (Kanya shree) எனும் திட்டத்தைத் துவங்கியது .