TNPSC Thervupettagam

ரூபிக் கன சதுரத்தில் கின்னஸ் உலக சாதனை

November 30 , 2018 2058 days 662 0
  • சீனாவின் 13 வயதுடைய க்யூ ஜீயான்யு தனது கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்தி 1 நிமிடம் 36.39 வினாடிகளில் 3 ரூபிக் கன சதுரங்களை ஒரே நேரத்தில் சேர்த்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
  • இவர் ஏற்கனவே ஒரு ரூபிக் கன சதுரத்தை மேலிருந்து கீழாக (15.84 வினாடிகளில்) சேர்த்து தனது முந்தைய சாதனையை விட 1.6 வினாடிகளுக்கு முன்னரே முடித்து மிக விரைவில் சேர்த்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார்.
  • இவர் ஏற்கனவே மூன்று ரூபிக் கன சதுரங்களை ஜாக்லிங் (ஒரே நேரத்தில் தூக்கி எறிதல் மற்றும் பிடித்தல்) செய்யும் போதே மிக விரைவில் சேர்த்த (5 நிமிடம் 6.61 வினாடி) சாதனையையும் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்