குமாவோன் படைப்பிரிவின் 13வது படைப்பிரிவின் சார்லி கம்பனி எனப்படும் பிரிவானது, லடாக்கில் உள்ள ரெசாங் லா கணவாயில் 1962 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்ட சீனத் தாக்குதலுக்கு எதிராகப் போரிட்டது.
மேஜர் ஷைத்தான் சிங் தலைமையில் 117 வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர்.
இவர்களில் இந்த போரின் போது 110 பேர் வீரமரணம் அடைந்தனர்.
13வது படைப்பிரிவானது சுஷுல் பகுதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது.
இந்தப் போரின் போது இந்திய வீரர்கள் பலர் உறைபனியால் உயிர் இழந்தனர்.
மேஜர் ஷைத்தான் சிங், சீனத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வீரமரணம் அடைந்தார்.
அவருக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டதால் மிக உயர்ந்த வீர விருதைப் பெற்ற இரண்டாவது இராணுவ வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
ரெசாங் லா, ரெசின் லா என்றும் அழைக்கப்படுகிறது.
இது இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள லடாக் மற்றும் சீன நிர்வாகத்தின் ஸ்பாங்கூர் ஏரிப் படுகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்த ஒரு மலைப்பாங்கானப் பாதையாகும்.
இது சீன அரசினால் உரிமை கோரப்பட்டு வரும் சுஷுல் பள்ளத்தாக்கின் கிழக்கு நீர் நிலை முகட்டில் அமைந்துள்ளது.