TNPSC Thervupettagam

ரெயில் மதத் மற்றும் ரயில்களில் பட்டியல்

June 16 , 2018 2358 days 660 0
  • மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரயாணிகளின் பயண அனுபவத்தை சுலபமாக்கிடுவதற்காக ரயில் மதத் மற்றும் ரயில்களில் பட்டியல் என்ற இரண்டு புதிய கைபேசி செயலிகளை வெளியிட்டிருக்கின்றார்.
  • ரயில் மதத் செயலியானது பயணிகளின் குறைகளை தீர்ப்பதை துரிதப்படுத்தி முறைப்படுத்த உதவுகின்றது. இரயில்களில் பட்டியல் என்ற செயலி எல்லா வித இரயில்களிலும் பரிமாறப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் விவரங்களையும் அவற்றின் விலைகளையும் சரிபார்க்க பயணிகளுக்கு உதவிடும்.
  • பயணத்தின் போது தேவைப்படும் உதவிக்கான கைபேசி செயலி என்ற பொருள்படும் ரயில் மதத் செயலி (Mobile Application for Desired Assistance During Travel)
    • பயணிகள் புகார்களை கைபேசி செயலி /இணைய நடைமுறை வாயிலாக பதிவு செய்யவும்,
    • அவ்வாறு பதியப்பட்ட புகார்களின் நிலை மீதான உண்மை நேர கருத்துகளை சரிபார்த்திடவும் உதவுகின்றது.
  • இந்த செயலி முதன் முறையாக புகார் மேலாண்மை அமைப்பை முழுமையாக எண்ணியல் படுத்தியுள்ளது (digitize)
  • இது வடக்கு ரயில்வே பிரிவால் (டெல்லி பிரிவு) மேம்படுத்தப்பட்ட இரயில் பயணிகள் குறைதீர்ப்பு மற்றும் மேலாண்மை அமைப்பை ஒருங்கிணைக்கின்றது. (RPGRAMS-Railway Passenger Grievance Redressal and Management System)
  • ரயில் மதத் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உதவி தொடர்பான பல்வேறு உதவிக்கான தொலைபேசி எண்களையும் காட்சிப்படுத்துகின்றது. மேலும் ஒரு சுலபமான நடவடிக்கையாக உடனடி உதவிக்காக நேரடி அழைப்பு வசதியையும் ஏற்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்