ரேடியோ அதிர்வெண்ணைப் பயன்படுத்தி என்சைம்கள் உருவாக்கம்
December 2 , 2018 2185 days 620 0
ACS உயிரிபொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வின்படி, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அறிவியலாளர்கள் ரேடியோ அதிர்வெண் கதிரியக்கத்தினைப் பயன்படுத்தி முதன்முறையாக என்சைம்களை உருவாக்கியுள்ளனர்.
இது என்சைம்கள் மற்றும் காந்தத் துகள்களை உள்ளடக்கிய சிறப்பான கலவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரேடியோ உமிழ்வானது உறிஞ்சப்பட்ட பின்னர் வெப்பமாக மாற்றப்பட்டு என்சைம்களின் செயல்பாடுகளானது 4 மடங்குகளுக்கும் மேலாக அதிகரிக்கின்றன.
இவ்வாறு ரேடியோ அதிர்வெண்ணை உபயோகித்து உடலில் உள்ள என்சைம்களின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தவும், செல்லின் வளர்சிதை மாற்றத்தினை சரி செய்யவும் முடியும்.