குடும்ப அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தற்பொழுது மாவட்டங்களில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் ரேஷன் பொருள்களை வாங்க முடியும்.
இந்தத் திட்டமானது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தத் திட்டமானது நான்கு மாதங்களுக்குள் விரிவாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
இந்த முன்முயற்சியானது ‘ஒரு தேசம், ஒரு ரேஷன் அட்டை’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.