ரைசினா உரையாடலின் மூன்றாவது பதிப்பு புது தில்லியில் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த புவி அரசியல் மாநாட்டின் 3வது பதிப்பில் தொடக்க உரையாற்றினார்.
வெளிநாட்டு அரசுத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும்.
ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற்ற இந்த வருட ரைசினா உரையாடலின் முக்கிய கரு “உடைக்கக் கூடிய மாற்றங்களை நிர்வகித்தல் ; எண்ணங்கள், நிறுவனங்கள், மரபுகள்”.
ரைசினா உரையாடல்
ஆண்டுதோறும் புது தில்லியில் நடக்கும் இந்த ரைசினா உரையாடல், இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கைக்கான பெருமைமிகு மாநாடு ஆகும்.
இந்த மாநாடு வெளியுறத்துறை அமைச்சகத்தாலும் முதன்மை சிந்தனைக் களஞ்சியமான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (Observer Research Foundation) என்ற அமைப்பாலும் இணைந்து நடத்தப்படுகின்றது.
இந்த மன்றம் சிங்கப்பூரின் ஷாங்கிரிலா (Shangri-La) உரையாடலின் பிரதியைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.