உலகின் முதல் விமானம் கண்டுபிடிக்கப்பட்டு 114 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தினமாக கொண்டாடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வடக்கு கரோலினாவில் உள்ள கிட்டி ஹாக் கடற்கரை பகுதியில், ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் சகோதரர்கள், தாங்கள் உருவாக்கிய விமானத்தின் மூலம் முதன்முதலில் வானில் பறந்து சாதனை படைத்தனர். பெட்ரோலை எரிபொருளாக கொண்ட அந்த விமானம் 12 விநாடிகளில் 120 அடி உயரத்தை அடைந்து தனது முதல் பயணத்தை வானில் பறந்தது.
அமெரிக்காவுக்கு புகழ் சேர்த்த ஒஹையோ மாகாணம் டெய்டன் நகரில் பிறந்த ரைட் சகோதரர்களை பெருமைப்படுத்தும் விதமாக டிச.17 "ரைட் சகோதரர்கள் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.