நதியின் குறைந்த நீர்மட்டம் ஆனது, முழுமையாக சரக்குப் பொருட்களால் கப்பல்கள் நிரப்பப் பட்டிருக்கும் போது முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஐரோப்பியக் கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாக செல்வதைக் கடினமாக்குகிறது.
தானியங்கள் போன்றப் பொருட்களிலிருந்து இரசாயனங்கள் மற்றும் நிலக்கரி வரையிலான சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இது ஒரு முக்கிய வழித் தடம் ஆகும்.
இந்த நதியானது சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் இருந்து வடக்கு கடல் வரை ஜெர்மன் தொழில்துறை மையப்பகுதிகள் வழியாக பாய்கிறது.
இது ரோட்டர்டாம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட வடக்குக் கடல் துறைமுகங்களில் அமைந்த தொழில்துறை உற்பத்தியாளர்களுக்கும் உலகளாவிய ஏற்றுமதி முனையங்களுக்கும் இடையேயான முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு இணைப்பாக செயல்படுகிறது.