விவசாயிகளினுடைய வாழ்வாதாரத்திற்கு (livelihood of farmers) ஆதரவளிப்பதற்காக, உழவர்களின் நண்பன் (friend of farmers) எனப் பொருள்படும் ரையத்து பந்து (Rythu Bandhu) எனும் முதலீட்டு ஆதரவுத் திட்டத்தினை (Investment support scheme) தெலுங்கானா அரசு தொடங்கியுள்ளது.
விவசாய விளைபொருட்கள் உற்பத்தியினையும் (agricultural production), உற்பத்தித் திறனையும் (productivity) அதிகரிக்க இத்திட்டத்தின் கீழ் ஓர் ஆண்டிற்கு இருமுறை விவசாயிகளுக்கு நேரடி நிதியியல் உதவி வழங்கப் பெறும்.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தினாலும் தொடங்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலீட்டு ஆதரவுகளை வழங்குகின்ற முதல் வகையானத் திட்டம் இதுவேயாகும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ 8000 ரூபாய் அளவு விவசாயிகள் முதலீட்டு ஆதரவினை பெறுவர். பருவகால பயிருக்கென (monsoon) ரூ.4000 ரூபாயும், குளிர்காலப் பயிருக்கென (Rabi season) ரூ.4000 ரூபாயும் வழங்கப்படும்.