சக்தி திட்டத்தின் கீழ் 6 தொழிற்துறை - நிலை நுண்செயலிகளின் முதல் குடும்பத்தை சென்னையின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தினைச் சேர்ந்த கணினி அறிவியலாளர் உருவாக்கியுள்ளார்.
300 சில்லுகளை (Chips) கொண்ட ஆரம்ப நிலைத் தொகுதி ரைஸ்க்ரீக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள Intel-ன் வசதியில் Linux இயங்கு முறையை இலவசமாக இயக்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது.
சக்தி திட்டம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் துவக்க முயற்சியாக 2014-ல் தொடங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் நிதி வழங்கப்படுகிறது.
அவர்களின் இந்த வடிவமைப்பு திறந்த ஆதாரம் ஆகும். மேலும் மற்றவர்களால் இவ்வடிவமைப்பை ஏற்றுக்கொள்ள முடியும்.
350 MHz அதிர்வெண்ணுடன் NAVIC (இந்திய பிராந்திய வழிகாட்டும் செயற்கைக்கோள்) மற்றும் மின்னணுவின் Internet of Things (IOT) ஆகியவற்றின் தேவைகளை RISECREEK பூர்த்தி செய்யும்.