விக்ரம் சாரபாய் விண்வெளி மையமானது (Vikram Sarabhai Space Centre - VSSC) கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவிலிருந்து ரோகிணி 200 என்ற ஒரு வளிமண்டல ஆய்வு விண்கலனை வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவியுள்ளது.
இதன் நோக்கம் கிரகணத்தின் போது பூமியில் உள்ள வளிமண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதாகும்.
VSSC ஆனது 2வது ஆர்எச் 200 என்ற விண்கலனையும் அடுத்த நாளிலேயே விண்ணுக்கு செலுத்தியது.
வளிமண்டல ஆய்வு விண்கலன்
இது ஒரு ஆய்வு விண்கலன் என்றும் அழைக்கப் படுகின்றது.
இது கருவிகளைச் சுமந்து செல்லும் ஒரு விண்கலன் ஆகும். இது அதன் துணை சுற்றுப்பாதையில் சுழலும் போது அளவீடுகளை எடுத்து அறிவியல் பரிசோதனைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த விண்கலன்கள் 1960களில் இருந்து தும்பாவிலிருந்து ஏவப்பட்டு வருகின்றன.