ரோடமைன் B என்பது அதன் மிகப் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்திற்குப் பெயர் பெற்ற ஒரு செயற்கை சாயமாகும் என்பதோடு இது ஜவுளி, காகிதம் மற்றும் தோல் போன்ற தொழில் துறைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் ஒளிரும் பண்புகள் காரணமாக அதன் பயன்பாடு அறிவியல் ஆராய்ச்சி வரை உள்ளது.
இருப்பினும், நுகர்வுப் பொருட்களில் இதன் பயன்பாடானது சுகாதார அபாயங்களைக் கொண்டுள்ளது.
ரோடமைன் B ஆனது டிஎன்ஏ சேதத்தை ஏற்படுத்தி, பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதோடு, புற்றுநோய் வளர்ச்சியைத் தூண்டும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதன் மீதான விலங்கு ஆராய்ச்சியானது, நீண்ட காலமாக சாயத்தின் பயன்பாட்டிற்கு உள்ளானதால் தொடர்ந்து கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற சில உறுப்புகளில் கட்டிகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அழகுசாதனப் பொருட்களில் இந்த ரோடமைன் சாயத்தின் பயன்பாட்டினை தடை செய்த முதல் நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றாகும் என்பதோடு அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆனது இது மனித நுகர்வுக்குப் பாதுகாப்பற்றது என்று வகைப்படுத்தி, உணவுப் பொருட்களில் இதைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தடை செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தமிழ்நாடு அரசானது பஞ்சு மிட்டாய் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்தது.
கர்நாடக மாநில அரசு, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பிரபலமானத் தெருவோர உணவு விற்பனைக் கடைகளில் ரோடமைன் B பயன்படுத்துவதைத் தடை செய்தது.