TNPSC Thervupettagam

ரோடோடென்ட்ரான்ஸ்

February 24 , 2023 513 days 257 0
  • கிரேக்க மொழியில் ரோஜா மரம் என்று பொருள்படும் ரோடோடென்ட்ரான் (பெரிடிய மலர்களைக் கொண்ட பசுமை மாறா செடி வகை) பருவநிலை மாற்றத்திற்கான ஒரு குறிகாட்டி இனமாக கருதப் படுகிறது.
  • இந்தியாவில் காணப்படும் அனைத்து வகையான ரோடோடென்ட்ரான்களிலும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் இமயமலைகள் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பின் ‘சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் இமய மலைகளின் ரோடோடென்ட்ரான்ஸ் - ஒரு விளக்க அறிக்கை’ என்ற தலைப்பிலான புதிய அறிக்கையில் 45 வகை ரோடோடென்ட்ரான்களைப் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் 132 வகையான (80 இனங்கள், 25 கிளையினங்கள் மற்றும் 27 வகைகள்) ரோடோடென்ட்ரான்கள் உள்ளன.
  • இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 வகைகளில், 24 வகைகள் டார்ஜிலிங் இமயமலையிலும், 44 சிக்கிம் இமயமலையிலும் காணப்படுகின்றன.
  • அவை ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மிதவெப்பப் பகுதிகளிலும், தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
  • ரோடோடென்ட்ரான்கள், முதன்முதலில் 1776 ஆம் ஆண்டில் கேப்டன் ஹார்ட்விக் என்பவரால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கண்டறியப்பட்டன.
  • இது நேபாளத்தின் தேசிய மலர் மற்றும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில மரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்