இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வயிற்றுப் போக்கிற்கு எதிரான தடுப்பூசியான “ரோட்டாவாக் தடுப்பூசிக்கு“ (Rotovac) உலக சுகாதார நிறுவனத்தின் முன் – தகுதிச் சான்று (Pre-qualification) கிடைத்துள்ளது.
ரோட்டாவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் முன் தகுதிச் சான்று கிடைத்துள்ளதன் மூலம், உலக அளவில் சுகாதாரம் மற்றும் மனிதாபிமான செயல்பாடுகளை மேற்கொண்டு யுனிசெப் (UNICEF) போன்ற உலக அமைப்புகள் உலகம் முழுவதும் தாங்கள் மேற்கொண்டுள்ள பொது சுகாதார தடுப்பூசி திறனூட்டல் திட்டத்திற்கு இந்தத் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அவற்றை பயன்படுத்த இயலும்
கடுமையான வயிற்றுப் போக்கானது ரோட்டா வைரஸின் காரணமாக உண்டாகின்றது. ஆண்டுதோறும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு கடுமையான வயிற்றுப்போக்கு (Diarrheic) முக்கிய காரணமாகும்.
ரோட்டாவாக் தடுப்பூசியானது உலகளாவிய தடுப்பூசி திறனூட்டல் திட்டத்திலும் (Universal Immunisation Programme) இந்தியாவின் தேசிய திறனூட்டல் திட்டத்திலும் (National Immunisation Scheme) சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.