TNPSC Thervupettagam

ரோட்டோருவா ஏரியின் கீழ் காந்தத் திறன் முரண்பாடு

February 10 , 2024 289 days 334 0
  • ரோட்டோருவா ஏரியின் தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்ம வெப்ப ஆற்றல் அமைப்பு காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மாவோரி புராணத்தில் கூறப்பட்டுள்ள இந்தத் தளம் ஆனது, நியூசிலாந்தின் வடக்கு தீவில் (நார்த் தீவு) செயல்பாட்டில் இல்லாத எரிமலை பள்ளத்தின் மேல் அமைந்துள்ளது.
  • சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எரிமலை வெடிப்பால் உருவாக்கப் பட்ட ரோட்டோருவா ஏரியானது இன்றும் பல புனல்வெப்ப ஆற்றல் நடவடிக்கைகள் காணப் படும் இடமாக உள்ளது.
  • சராசரியாக சுமார் 10 மீட்டர் ஆழம் கொண்ட ஓர் ஆழமற்ற ஏரியான இந்த ஏரியானது டௌபோ எரிமலை மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த எரிமலைப் பாறைகள் அங்கு மாக்னடைட் இருப்பதால் வலுவான நேர்மறையான காந்த எதிர் நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.
  • இருப்பினும், இங்கு கண்டறியப்பட்ட முரண்பாடு ஆனது நீர்ம வெப்ப ஆற்றல் கொண்ட திரவங்கள் மாக்னடைட் கனிமத்தினைப் பைரைட்டாக மாற்றியதாக வெளிப்படுத்தச் செய்கின்றன.
  • இது காந்த சமிக்ஞையை கணிசமாகக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்