ரோந்து கப்பலை கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது எல் & டி நிறுவனம்
October 29 , 2017 2714 days 1037 0
‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்ட ரோந்துக் கப்பலை எல் & டி நிறுவனம் கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தது.
இது தனியார் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட நாட்டின் முதல் பாதுகாப்புக் கப்பலாகும்.
சென்னை எண்ணூருக்கு அருகில் இருக்கும் காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள எல் & டி யின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வெளி நிறுவனத்தின் உதவியில்லாமல் கட்டப்பட்ட ஏழு ரோந்து கப்பல்களின் ( Offshore Patrol Vessels - OPVs) வரிசையில் ‘விக்ரம்’ முதலாவது தயாரிப்பாகும்.
இந்தக் கப்பல் முழு வடிவமைப்பு மற்றும் கட்டுமான முறைகள் ஆகியவற்றுக்காக அமெரிக்க கப்பல் கழகம் (American Bureau of Shipping) மற்றும் இந்தியக் கப்பல் பதிவாளர் (Indian Registrar of Shipping) ஆகியோரிடமிருந்து தர அங்கீகார சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
இந்தக் கப்பல் வெப்பமண்டல நிலைகளில் செயல்படும் திறன் கொண்ட அனைத்து வசதிகளுடைய தொலைநிலை அறிகருவி, கடல்பயண வழிகாட்டி மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது.