கோவா மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள், அந்தக் கடலோர மாநிலத்தில் பரவலாக அதன் சுவைக்காக உண்ணப்படும் ஒரு காட்டு காளான் இனத்திலிருந்து தங்க நுண் துகள்களை உருவாக்கியுள்ளனர்.
கரையான் புற்றுகளில் வளரும் டெர்மிடோமைசஸ் (கரையானிக் காளான்) என்ற ஒரு இனத்தினைச் சேர்ந்த காளான்கள் அந்தப் பகுதியில் 'ரோன் ஓல்மி' என்று அழைக்கப் படுகிறது.
இது கோவா மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள உண்ணக்கூடிய காட்டு காளான் வகையாகும் என்பதோடு, இது மழைக்காலங்களில் உணவாக உட்கொள்ளப்படுகிறது.
இந்த வகை காளான், தூய முப்பரிமாணத்திலான உருண்டை வடிவில் வளர்க்கப்பட்டு, நுண்ணிய தங்க துகள்களை உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டது.
குறிப்பிட்ட பாதிப்பிற்கான மருந்து உள்ளீடு, மருத்துவ வரைபடமாக்கல் மற்றும் மின்னணு உபகரணங்கள் உற்பத்தி போன்ற பல்வேறு பயன்பாடுகளில் நுண்ணியத் தங்க துகள்களுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஒரு மில்லி கிராம் நுண்ணிய தங்கத் துகள்களின் விலை சுமார் 80 டாலர் ஆகும் என்பதோடு, ஒரு கிராமிற்கு இதன் மதிப்பு சுமார் 80,000 டாலர்கள் ஆகும்.
பிற நாடுகள் இவற்றின் உற்பத்திக்கு என்று மிகவும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன காரணிகளைப் பயன்படுத்துகின்றன.