ஆராய்ச்சியாளர்கள் ரோபோமேப்பர் என்ற ஒரு எந்திர மனிதனை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இது புதிய குறைக்கடத்திப் பொருட்களை திறம் மிக்க முறையிலும், நிலைத்தன்மை மிக்க முறையிலும் உருவாக்குவதற்கானச் சோதனைகளை மேற்கொள்ளும் ஒரு திறன் கொண்டது.
இது செயல்முறையைத் தானியக்கமாக்குவதன் மூலமும், நவீன அச்சிடல் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பல்வேறு பொருள் மாதிரிகளை நுண்வடிவில் வடிவமைப்பதன் மூலமும் வேறுபட்ட அணுகுமுறையை கையாளுகிறது.
இந்த எந்திரமானது, முந்தையத் தானியங்கி நுட்பங்களை விட கிட்டத்தட்ட 10 மடங்கு வேகமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் செயல்முறை பண்பாக்கச் செயல்முறையின் பசுமை இல்ல வாயு உமிழ்வை 10 மடங்கு குறைத்துள்ளது.