TNPSC Thervupettagam

ரோப்பூர் அணு மின்நிலையம்

March 7 , 2018 2454 days 1111 0
  • வங்கதேசத்தின் ரோப்பூர் என்னுமிடத்தில் அணுமின் நிலையத்தைக்  கட்டு வதற்கு இந்தியா, வங்கதேசம் மற்றும் இரஷ்யாவிற்கு இடையே ஓர் முத்தரப்பு (tripartite) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இது இந்தியா-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் மூன்றாவது நாட்டில் மேற்கொள்ளப்படும் முதல் அணுசக்தி திட்டம் ஆகும்.
  • மேலும் இது இந்தியாவின் முதல் வெளிநாட்டு அணுசக்தி கட்டமைப்பு முனைவாகும்.
  • ரோப்பூர் அணு உலைத் திட்டமானது வங்கதேசத்தின் முதல் அணுசக்தி திட்டம் ஆகும். இது ரஷ்யாவின் உதவியோடு வங்கதேசத் தலைநகர் டாக்காவிற்கு அருகே கட்டப்படவுள்ளது.
  • ரோப்பூர் அணுமின் நிலையத்தின் இரண்டு உலைகளும் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானை அடுத்து தெற்காசிய நாடுகளில் அணுசக்தியை ஆற்றல் உற்பத்திக்காக பயன்படுத்தும் மூன்றாவது நாடாக வங்கதேசம் உருவாகும் .
  • ரோப்பூர் அணுமின் நிலையத்தின் ஒவ்வொரு உலைகளின் திறனும்   1200 மெகா வாட்கள் (Mega Watts) ஆகும்.
  • இரஷ்யாவானது இந்த அணுமின் நிலையத்தை Turnkey செயல்முறையின் அடிப்படையில் கட்டமைக்க உள்ளது. Turnkey செயல்முறையில் முழு கட்டுமானத் திட்டத்தையும் ஒப்பந்ததாரர்களே மேற்கொள்வர். மேலும் கட்டமைக்கப்படும் அணுமின் நிலையத்தில் ஏற்படும் எத்தகு எதிர்காலத்திய அசாம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு ஒப்பந்ததாரர்களே பொறுப்புடையவர்களாவர்.
  • அணுசக்தி விநியோக குழுவில் (Nuclear Suppliers Group) இந்தியா உறுப்பினரல்லாததால், பிற நாடுகளின் அணு உலைகள் கட்டமைப்பில் இந்தியா நேரடியாக பங்கு பெற இயலாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்