தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 உலகக் கோப்பைப் போட்டியில் பெற்ற வெற்றி தான் இந்த வடிவப் போட்டியில் தங்களது கடைசி வெற்றி என்று இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அறிவித்துள்ளனர்.
கபில்தேவ் (1983) மற்றும் M.S. தோனி (2007 மற்றும் 2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் என்றதொரு பெருமையை ரோஹித் பெற்றுள்ளார்.
50 T20 போட்டிகளில் அணித் தலைவராகப் பங்காற்றிய முதல் அணித் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி அவர் பெற்ற 50வது வெற்றியாகும்.
அவர் ஐந்து T20I சதங்களையும் அடித்துள்ளார் என்ற வகையில் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு இணையான வகையில் இந்த வடிவப் போட்டியில் அதிக சதம் அடித்துள்ளார்.
கோஹ்லி தனது வாழ்க்கையில் 125 T20I போட்டிகளில் விளையாடி, சராசரியாக 48.69 மற்றும் 137.04 ஸ்ட்ரைக் வீதத்தில் (ஒரு ஓவருக்கு குறிப்பிட்ட ரன்களை எடுத்தல்) 4188 ரன்கள் எடுத்துள்ளார்.
அவர் இந்த வடிவப் போட்டியில் இரண்டாவது அதிக ரன்களை எடுத்துள்ளார்.
T20 உலகக் கோப்பைப் போட்டிகளில் ரன் குவித்தவர்களின் தரவரிசையில் முன்னணி இடத்தினைப் பெற்றதுடன் அவர் தனது பங்கேற்பினை நிறைவு செய்து கொண்டார்.
இரண்டு வெவ்வேறு T20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் இவரே ஆவார்.
2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளின் சிறந்த ICC ஆடவர் T20I அணியிலும் ஒருவராக அவர் இடம் பெற்றுள்ளார்.