உலக வனவிலங்கு நிதியம் மற்றும் அனிமல் பிளானட் (Animal Planet) உடன் இணைந்து இந்தியாவின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ரோஹித்4ரைனோஸ் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (அ) இந்திய காண்டாமிருகத்தினை பராமரிக்கும் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதலே இதன் நோக்கமாகும்.
உலக காண்டாமிருக நாளான செப்டம்பர் 22 இன் நினைவாக அனிமல் பிளானட் சேனலில் இந்த பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளது.
வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும், இனப்பெருக்கக் கால நோய்களினால் ஏற்படும் அதிக அளவு இறப்பு போன்ற பலவிதமான அச்சுறுத்தல்களை இந்தக் காண்டாமிருகங்கள் எதிர்கொள்கின்றன.
நேபாளின் தராய் புல்வெளிகள், உத்திரப் பிரதேசத்தின் வட பகுதி, பீகாரின் வட பகுதி, மேற்கு வங்காளத்தின் வட பகுதி மற்றும் அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.