TNPSC Thervupettagam

ரோஹியங்காக்கள் மீதான முத்தரப்பு ஒப்பந்தம்

September 27 , 2019 1793 days 633 0
  • இடம் பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் மதிப்பிடுவதற்காகவும் முத்தரப்பு நடைமுறை ஒன்றை ஏற்படுத்த மூன்று நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
  • அந்த நாடுகளாவன
    • வங்க தேசம்
    • சீனா
    • மியான்மர்.
  • ரோஹிங்கியா மக்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான இரண்டு முயற்சிகளும் தோல்வியுற்றன.
  • நாடு திரும்புவதற்கு உகந்த சூழ்நிலை ரகைன் மாகாணத்தில் ஏற்படாத காரணத்தினால் ரோஹிங்கியா மக்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை.
இதுபற்றி
  • ரோஹிங்கியா மக்கள் என்பவர்கள் மியான்மரின் ரகைன் மாகாணத்தில் குடியிருக்கும் ஒரு நாடற்ற இந்தோ-ஆரிய இனக் குழுவைச் சேர்ந்தவர்களாவர்.
  • இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். அதில் சிலர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்
  • இவர்கள் மியான்மர் அரசாங்கத்தினால் துன்புறுத்தப்பட்டனர். இவர்கள் வங்க தேசம், சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
  • 2013 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்களில் ஒருவராக ரோஹிங்கியா மக்களை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்